கனடாவில் குறைவடைந்துள்ள வாகன கொள்ளை சம்பவங்கள்
கனடாவில்(Canada) வாகன கொள்ளை சம்பவங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அந்நாட்டு காப்புறுதி மோசடி தவிர்ப்பு பிரிவினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இதன்படி, இந்த ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் வாகன கொள்ளை சம்பவங்களின் எண்ணிக்கை 17 வீதத்தினால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விசேட பொலிஸ் படையணி
கடந்த 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் இவ்வாறு வாகன கொள்ளை சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
எல்லை பாதுகாப்பு கண்காணிப்பு பணிகள் அதிகரிக்கப்பட்டமை, பொலிஸாரின் விசாரணைகள், அரசாங்கத்தின் நடவடிக்கை மற்றும் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு போன்ற காரணிகளினாலே வாகன கொள்ளை சம்பவங்கள் குறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், கூட்டு முயற்சியின் மூலம் வாகன கொள்ளை சம்பவங்கள் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் ஒன்றாரியோ மற்றும் கியூபெக் மாகாணங்களில் பொலிஸார் வாகன கொள்ளை தடுப்பு தொடர்பிலான விசேட பொலிஸ் படையணிகளை நிறுவி நடவடிக்கை எடுத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 20 மணி நேரம் முன்

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam
