லண்டன் லூசியம் பகுதி பிரபல தமிழ் வர்த்தகர் வீட்டில் நள்ளிரவில் திருட்டு! சிக்கியது வீடியோ காட்சிகள்

London Robbery Car CCTV Footage Sale
By Mayuri Oct 21, 2021 06:12 PM GMT
Report

லண்டன் லூசியம் பகுதியில் வசித்து வரும் பிரபல தமிழ் வர்த்தகரின் காரொன்று அண்மையில் நள்ளிரவில் திருடிச் செல்லப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தகர் தனது காரினை விற்பனை செய்வதற்காக இணையத்தளம் ஊடாக விளம்பரம் செய்துள்ளார்.

இந்த விளம்பரத்தை பார்வையிட்ட மூவர் காரினை வாங்குவதாக கூறி குறித்த வர்த்தகரை நாடியுள்ளனர்.

குறித்த காரினை பார்வையிடுவதற்காக வர்த்தகரின் வீட்டுக்கு வந்த மூன்று பேர் காரினை பார்வையிட்டப் பின்னர் அதன் மேலதிக இணைப்புச் சாவியை எவரும் காணாத சமயம் லாவகமாக எடுத்துள்ளனர்.

அதற்கு பதிலாக தாங்கள் கொண்டு வந்திருந்த பிறிதொரு சாவியை வைத்தும் சென்றுள்ள போதும் இதனை யாரும் அறிந்திருக்கவும் இல்லை.

அதன் பின்னர் இரவு நேரத்தில் மீண்டும் அங்கு வருகை தந்த சந்தேகநபர்கள் மேலதிக இணைப்பு சாவியை வைத்து காரை திருடிச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவமானது சிசிடிவி கமராவில் தெளிவாக பதிவாகியுள்ள நிலையில் குறித்த காணொளியும் தற்போது வெளியாகியுள்ளது.


இந்த சம்பவம் வாகன விற்பனைக்காக இணையத்தளங்களில் விளம்பரங்கள் செய்வோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் திருடப்படுகின்ற வாகனங்களுக்கு பதிலாக காப்புறுதி நிறுவனங்களால் புதிய வாகனங்கள் வழங்கப்படுகின்றதால் வாகனங்களுக்கான அடுத்த வருடத்திற்கான காப்புறுதி தொகை அதிகரிக்கிறது.

இதனால் வாகனங்களை பறிகொடுப்பவர்கள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கின்றனர்.

அத்துடன் இவ்வாறான வாகனங்களை விற்பனை செய்வதற்கான விளம்பரங்களை போட்ட பின்னர் அதனை பார்த்து கொள்வனவு செய்வதற்காக வருபவர்களில் ஒரு சிலர் வாகனத்தின் இரண்டாவது இணைப்பு சாவியையும் (Spare Key), காரினுடைய புத்தகத்தையும் மிகவும் லாவகமாக திருடிச் செல்கின்றனர். இந்த இடத்தில் தான் வாகனத்தின் உரிமையாளர்கள் இராண்டாவது இணைப்பு சாவி மற்றும் வாகன புத்தகம் ஆகிய இரு விடயங்களிலும் அவதானமாக இருக்க வேண்டும்.

இந்த சம்பவம் பல்வேறு விடயங்களை எமக்கு பல்வேறு விடயங்களை எமக்கு பாடமாக கற்றுத் தந்திருக்கிறது. இவ்வாறு விற்பனைக்கான விளம்பரங்கள் செய்பவர்கள் மிக அவதானத்துடன் இருக்க வேண்டும் என்பதை இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை சுட்டிக்காட்டியிருக்கின்றது.

குறிப்பாக புலம்பெயர்ந்து பிற தேசங்களில் வாழும் மக்கள் அதீத கஸ்டங்களுக்கு மத்தியில் உழைத்து தங்களுக்கான பொருட்களை ஈட்டும்போது அவை தொடர்பான அதீத கவனம் தேவை என்பது வலியுறுத்தப்படுகின்றது.

எப்பொழுதும் புலம்பெயர் நாடுகளிலன் காப்புறுதிகள் வைத்திருக்கிறோம் என்பதற்காக திருட்டு சம்பவங்கள் உள்ளிட்ட விடயங்களை கவனயீனமாக எடுக்காமலம் இவ்வாறான விடயங்களில் அவதானமாக இருத்தல் கட்டாயமாகும். 

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US