காரில் சென்று வீடுகளில் கொள்ளை: சந்தேகநபர் கைது
இரவு நேரங்களில் காரில் சென்று வீடுகளை உடைத்து கொள்ளையிட்டு வந்த சந்தேக நபரை, காருடன் கைது செய்துள்ளதாக வடமேல் மாகாண தெற்கு குற்றவியல் பிரிவின் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் மொறட்டுவை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மொறட்டுவை பிரதேசத்தில் ஐந்து வீடுகள் உடைக்கப்பட்டு கொள்ளையிட்ட சம்பவம் மற்றும் கல்கிஸ்சை பகுதியில் ஒரு வீடு உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என பொலிஸார் கூறியுள்ளனர்.
மொறட்டுவை கொரலவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சந்தேக நபர் வீடுகளை உடைத்து கொள்ளையிட்ட தங்க ஆபரணங்கள், பணம், வெளிநாட்டு மதுபான வகைகள் உள்ளிட்ட பொருட்களை வேறு நபர்களுக்கு விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
