இலங்கையில் வாகன விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு
இலங்கையில் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக வாகன இறக்குமதிக்கு பல ஆண்டுகளாக தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாட்டில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விலைகள் மேலும் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாகன விலைகள் அதிகரிப்பு
டொலர் தட்டுப்பாடும், வட் வரி உயர்வுமே இதற்கு காரணம் என வாகன வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக கார் டயர் விலை 50 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், வாகனங்களின் விலையும் உயர்ந்துள்ளது. வாகனங்களை விற்பனை செய்யும் இணையதளங்கள் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
நாட்டில் தற்போது கடும் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ள போதிலும், எரிபொருள் சிக்கன வாகனங்களின் விலை குறைவதற்கான அறிகுறியே இல்லை என முதன்முறையாக கார் வாங்க முற்படும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
பாவித்த வாகன விற்பனை அதிகரிப்பு
உதாரணமாக தற்போது சுஸுகி அல்டோ இந்திய காரின் விலை 4 மில்லியனை நெருங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. நாட்டில் மிகவும் பிரபலமான சில வாகனங்களின் தற்போதைய விலைகள் வெளியாகியுள்ளன.
டொயோட்டா – விட்ஸ் – 2018 – 90 லட்சம் ரூபாயை கடந்துள்ளது. டொயோட்டா – பிரீமியர் – 2017 – ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய்க்கும் அதிக விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. டொயோட்டா – எக்வா ஜீ – 2012 – 70 லட்சம் ரூபாய்க்கு மேல் அதிக விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.
ஹொன்டா – வெஸல் – 2014 – 90 லட்சம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகின்றது. ஹொன்டா – பிட் – 2012 – 80 லட்சம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகின்றது.
ஹொன்டா – க்ரீஸ் – 2014 – 88 லட்சம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகின்றது.
நிஷான் – எக்ஸ் ட்ரேல் – 2015 – ஒன்றரை கோடி ரூபாயை கடந்துள்ளது. சுசுகி – வெகன் ஆர் – 2017 – 60 லட்சம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகின்றது.
சுசுகி – எல்டோ – 2015 – 35 லட்சம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகின்றது. சுசுகி – ஜப்பான் எல்டோ – 2017 – 55 லட்சம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகின்றது.
மைக்ரோ – பென்டா – 2016 – 29 லட்சம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகின்றது.