இலங்கையில் வேகமாக அதிகரிக்கும் கார்களின் விலை
நாட்டிற்கு வாகனங்களை இறக்குமதி செய்வதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளதால், நாட்டில் பயன்படுத்திய கார்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
இந்நிலை தொடருமானால் வாகன விலைகள் மேலும் உயரலாம் என வாகன விற்பனையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதிகரிக்கும் விலை
இதேவேளை, கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் இருந்து தற்போது வரை வாகனங்களின் விலை எவ்வாறு உயர்ந்துள்ளது என்பது தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி, டொயோட்டா பிரீமியர் 2017 இன் முந்தைய விலை ஒரு கோடியே நாற்பத்தாறு லட்சம் ரூபாவாக காணப்பட்ட நிலையில் அதன் புதிய விலை ஒரு கோடியே அறுபது லட்சமாக உயர்வடைந்துள்ளது.
டொயோட்டா விட்ஸ் 2018
இன் முந்தைய விலை 80 லட்சம் ரூபாவாக காணப்பட்ட நிலையில் அதன் புதிய விலை 90 லட்சமாக உயர்வடைந்துள்ளது.
டொயோட்டா Aqua G 2012 இன் முந்தைய விலை 60 லட்சம் ரூபாவாக காணப்பட்ட நிலையில் அதன் புதிய விலை 66 லட்சமாக உயர்வடைந்துள்ளது.
ஹொன்டா வெஸல் 2014 இன் முந்தைய விலை 80 லட்சம் ரூபாவாக காணப்பட்ட நிலையில் அதன் புதிய விலை 95 லட்சமாக உயர்வடைந்துள்ளது.
ஹோண்டா பிட் 2012 இன் முந்தைய விலை 53 லட்சம் ரூபாவாக காணப்பட்ட நிலையில் அதன் புதிய விலை 67 லட்சமாக உயர்வடைந்துள்ளது.
ஹோண்டா கிரேஸ் 2014 இன் முந்தைய விலை 78 லட்சம் ரூபாவாக காணப்பட்ட நிலையில் அதன் புதிய விலை 91 லட்சமாக உயர்வடைந்துள்ளது.
நிசான் எக்ஸ் டிரெயில் 2015 இன் முந்தைய விலை 84 லட்சம் ரூபாவாக காணப்பட்ட நிலையில் அதன் புதிய விலை ஒரு கோடியே நாற்பது லட்சமாக உயர்வடைந்துள்ளது.
சுஸுகி வேகன் ஆர் 2014 இன் முந்தைய விலை 47 லட்சம் ரூபாவாக காணப்பட்ட நிலையில் அதன் புதிய விலை 52 லட்சமாக உயர்வடைந்துள்ளது.
சுஸுகி ஆல்டோ 2015 இன் முந்தைய விலை 30 லட்சம் ரூபாவாக காணப்பட்ட நிலையில் அதன் புதிய விலை 32 லட்சமாக உயர்வடைந்துள்ளது.
சுசுகி ஜப்பான் ஆல்டோ 2017 இன் முந்தைய விலை 45 லட்சம் ரூபாவாக காணப்பட்ட நிலையில் அதன் புதிய விலை 52 லட்சமாக உயர்வடைந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |