கார் - மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து : சாரதி படுகாயம்
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் நுவரெலியா வீதியில், மல்லிப்பூ சந்திக்கு அண்மையில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
குறி்த்த விபத்தானது நேற்று(22.07.2026) மாலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிள் சாரதி கடுமையாக காயமடைந்து டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸார் மேலதிக விசாரணை
குறித்த விபத்து கொட்டகலை பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும், நுவரெலியா நோக்கி பயணித்த வெளிநாட்டு பிரஜை ஒருவரை ஏற்றிச் சென்ற காரும் நேருக்கு நேர் மோதியுள்ளன.

கார் சாரதி முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதாகக் சம்பவத்தினை நேரில் கண்டோர் தெரிவித்துள்ளனர்.
விபத்து ஏற்பட்டவுடன் 1990 'சுவசெரிய' அவசர மருத்துவ சேவைக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவசர மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதிக்கு முதலுதவி வழங்கி, டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இந்த விபத்துக்கான காரணம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




