300 அடி பள்ளத்தில் பாய்ந்த கார் : சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நபர்
ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியின் சென் ஜோன் டிலரி பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் 300 அடி பள்ளத்தில் பாய்ந்து கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று(17.04.2026) காலையில் இடம்பெற்றுள்ளது.
300 அடி பள்ளத்தில் விழுந்த கார்
பலாங்கொடையில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த கார் ஒன்றே இவ்வாறு கெசல்கமுவ ஓயாவிற்குள் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தின் போது சம்பவ இடத்திலேயே ஆண் ஒருவர் பலியாகியுள்ளதுடன், காரின் சாரதி மற்றும் இரண்டு பெண்கள் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.

இவர்கள் பலாங்கொடை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
காயமடைந்த மூவரும் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, உயிரிழந்தவரின் சடலம் அதே வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பாகப் பொகவந்தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கையில் அரைகுறை கவர்ச்சி உடையில் வலம்வந்த சீரியல் நடிகை தர்ஷனா... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
துப்பாக்கி தோட்டாக்களுடன் சிறைக்குள் நுழைய முயன்ற பள்ளிச் சிறுமி: விசாரணையின் கூறிய காரணம் News Lankasri
27வது திருமண நாள் நெருங்கும் நிலையில் விவாகரத்து வழக்கு வாபஸ்! விஜய்யுடன் மீண்டும் இணைவாரா? Manithan