நானுஓயாவில் சொகுசு கார் விபத்து : ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில், நானு ஓயா - வெண்டிகோனர் பகுதியில் இன்று (16) பிற்பகல் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து அதிசொகுசு காரொன்று வீதியோரத்தில் உள்ள கற்பாறையில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் 34 வயதுடைய காரின் சாரதி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நுவரெலியாவில் இயங்கும் தனியார் வைத்தியசாலையில் விசேட வைத்தியர் ஒருவருக்கு சொந்தமான அதிசொகுசு காரே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணை
கொழும்பில் இருந்து நுவரெலியா நோக்கி சென்ற சொகுசு கார் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் இழுத்துச் செல்லப்பட்டு கற்பாறையில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதான வீதியில் வேகமாக சென்ற காரின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் அல்லது சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதால், விபத்து ஏற்பட்டிருக்கலாம் என விசாரணை நடத்தி வரும் நானுஓயா பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
you may like this

திருமணத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன் கணவருடன் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே.. வீடியோ இதோ Cineulagam

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam

Optical illusion: படத்தில் '44' மற்றும் '33' என்ற மாறுபட்ட இலக்கங்களில் '88' எங்கே மறைந்துள்ளது? Manithan

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri
