கந்தளாய் பகுதியில் கார் விபத்து: உயிர் தப்பிய சாரதி
கந்தளாய் – வெலிங்டன் சந்தி பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தில் வாகனம் பலத்த சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (03.03.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் தீவிர விசாரணை
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
பேராறு பகுதியிலிருந்து வந்த கார் ஒன்று வெலிங்டன் சந்தி பிரதான வீதிக்குள் நுழைய முற்பட்ட போது, கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த கடை ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோதிய கார் மற்றும் குறித்த கடையின் முன்பகுதி சேதமடைந்துள்ளதுடன், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கரவண்டி ஒன்றின் முன்பகுதியும் சேதமடைந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் போக்குவரத்து பொலிஸ் பிரிவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பெங்களூரு நட்சத்திர ஹோட்டலில் சடலமாக மீட்கப்பட்ட 2 சிறுமிகள்: தந்தை எடுத்த விபரீத முடிவு News Lankasri