தென்னிந்திய நடிகர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் ஆரம்பம்
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்திற்கு கோவிட் தொற்று ஏற்பட்டதன் காரணமாக நேற்று காலமானார்.
இவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த விஜயகாந்த் உடல் இன்று காலை சென்னை தீவுத்திடலுக்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
சந்தன பேழை
அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், தேமுதிக தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்திய நிலையில் இறுதி ஊர்வலமானது தற்போது ஆரம்பமாகியுள்ளது.
இந்நிலையில், விஜயகாந்தின் உடலை தாங்கும் சந்தனப் பேழை தயாராகியிருக்கிறது.
மேலும், குறித்த சந்தன பேழையில் 'புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த்' என்று பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.
விஜயகாந்த் துயில போகும் சந்தன பேழையில் நிறுவனத் தலைவர், தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்றும் பொறிக்கப்பட்டுள்ளது
அத்தோடு அவரது இறுதி நிகழ்ச்சிக்காக உருவாக்கப்பட்ட சந்தனப் பேழை தமிழ்நாட்டின் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





இந்தியா-ரஷ்யா புதிய ஒப்பந்தம்: ரயில்வே, அலுமினியம், சுரங்க தொழில்நுட்பங்களில் கூட்டு முயற்சி News Lankasri

காவேரியை சுக்கு நூறாக உடைக்கும் விஷயத்தை தந்திரமாக செய்த பசுபதி, எப்படி சமாளிக்கப்போகிறார்... மகாநதி சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

இந்தியாவை கல்லறை என விமர்சித்துள்ள சீன ஊடகம் - இரு நாடுகளின் உறவை மேம்படுத்த வலியுறுத்தல் News Lankasri
