றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் குடை மிளகாய் செய்கை
கிளிநொச்சி (kilinochchi) இயக்கச்சியில் (Iyakachchi) அமைந்துள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் (Reecha Organic Farm) பல்வேறு புதிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் குடை மிளகாய்(capsicum) செய்கையானது மிக சிறப்பான முறையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் அமைந்துள்ள உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் சுற்றுலாத் தலமே றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணை ஆகும்.
சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பண்ணையில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல்வேறுபட்ட புதிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், தற்போது குடை மிளகாய்(capsicum) செய்கையானது றீ(ச்)ஷாவில் மேற்கொள்ளப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவுக்கு எதிராக புலம்பெயர் டாக்சி ஓட்டுநரின் மகன்: அவுஸ்திரேலிய அணியில் இந்திய வம்சாவளி பவுலர் News Lankasri