வன்முறை தீவிரவாதத்தை தடுப்பதற்கு சமூக குழுக்களின் திறன்களை மேம்படுத்தல் வேலைத்திட்டம்(Photo)

Batticaloa Sri Lanka Sri Lankan Peoples
By Rusath Jun 16, 2022 12:53 PM GMT
Report

இலங்கையில் வன்முறை தீவிரவாதத்தை தடுப்பதற்கு சமூகக் குழுக்களின் திறன்களை மேம்படுத்தல் தொடர்பான வேலைத்திட்டமொன்று அமுல்படுத்தப்பட்டு வருவதாக அத்திட்டத்திற்குப் பொறுப்பான முகாமையாளர் ஷாபி நயாஜ் தெரிவித்துள்ளார்.

தொடர்பாடலுக்கான பயிற்சி மையத்தின் (Centre for Communication Training) ஒருங்கிணைப்பில் காத்தான்குடி கடற்கரையோர விடுதியில் நேற்று(15) மாலை வன்முறை தீவிரவாதத்தை தடுப்பதற்கான தெளிவூட்டல் விழிப்புணர்வு, தொடர்பாடலுக்கான பயிற்சி மையத்தின் தலைமை செயற்பாட்டு அலுவலர் பி. பெனிக்னஸின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்றுள்ளது.

விழிப்புணர்வு 

வன்முறை தீவிரவாதத்தை தடுப்பதற்கு சமூக குழுக்களின் திறன்களை மேம்படுத்தல் வேலைத்திட்டம்(Photo) | Capabilities Social Prevent Modern Terrorism

இந்த தெளிவூட்டல் விழிப்புணர்வு செயலமர்வில் சகல சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் சமூக அமைப்புக்களின் அங்கத்தவர்கள், மாவட்ட சர்வமத செயற்பாட்டாளர்கள், அரச அலுவலர்கள், இளைஞர் யுவதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிகழ்வில் இலங்கையில் வன்முறை தீவிரவாதத்தை தடுப்பதற்கான திட்டத்தின் முகாமையாளர் ஷாபி நயாஜ், அதன் சிரேஷ்ட திட்ட அலுவலர் என்.எம். அமில மதுசங்க, திட்ட அலுவலர் மஹேஷா பத்திராஜா, தொடர்பாடலுக்கான பயிற்சி மையத்தின் திட்ட அலுவலர் எச்.எம். பாத்திமா சர்மிலா உள்ளிட்ட பல அலுவலர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

வன்முறை தீவிரவாதத்தை தடுப்பதற்கு சமூக குழுக்களின் திறன்களை மேம்படுத்தல் வேலைத்திட்டம்(Photo) | Capabilities Social Prevent Modern Terrorism

இலங்கையில் வன்முறை தீவிரவாதத்தை தடுப்பதற்கு சமூக குழுக்களின் திறன்களை மேம்படுத்தல் திட்டம் மட்டக்களப்பு, மன்னார், வவுனியா, அம்பாறை, கண்டி, குருநாகல் ஆகிய ஆறு மாவட்டங்களில் அமுல்படுத்தப்படுவதாக அதன் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உறுப்பினர்கள் 

வன்முறை தீவிரவாதத்தை தடுப்பதற்கு சமூக குழுக்களின் திறன்களை மேம்படுத்தல் வேலைத்திட்டம்(Photo) | Capabilities Social Prevent Modern Terrorism

மேலும் சமூகங்களின் உறுப்பினர்கள் 2400 பேர், 980 இளைஞர் யுவதிகள், சிவில் சமூக அமைப்புக்களின் அங்கத்தவர்கள், மாவட்ட சர்வமத செயற்பாட்டாளர்கள், அரச அலுவலர்கள், பொலிஸார், சமூகத் தலைவர்கள் உட்பட 480 பேர் உள்ளடங்கலாக மொத்தம் 10 இலட்சம் பிரஜைகளை இணைத்துக் கொண்டு இத்திட்டம் அமுலாக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்முறை தீவிரவாதத்தை தடுப்பதற்கு சமூக குழுக்களின் திறன்களை மேம்படுத்தல் வேலைத்திட்டம்(Photo) | Capabilities Social Prevent Modern Terrorism

இந்த நிகழ்சித்திட்டம் தேசிய சமாதானப்பேரவை, ஹெல்விற்றாஸ் ஸ்ரீலங்கா ஆகிய தன்னார்வ நிறுவனங்களின் வழிகாட்டலில் ஜரோப்பிய ஒன்றியத்தின் அனுசரணையில் நடாத்தப்பட்டு வருகின்றது.

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US