ரணிலின் பயணங்களையும் அநுரவின் பயணங்களையும் ஒப்பீடு செய்வது தவறு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பயணங்களயும் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பயணங்களையும் ஒப்பீடு செய்வது தவறு என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீா்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனியான விமானமொன்றை ஒதுக்கி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டதனையும், தற்போதைய ஜனாதிபதி அனுராதபுரத்தில் தனது தாயாரை பார்க்கச் செல்வதனையும் ஒப்பீடு செய்ய முடியாது எனவும் அது தவறானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டில் செல்லும் பயணங்களுடன் வெளிநாட்டு பயணங்களுடன் ஒப்பீடு செய்ய முடியாது என தெரிவித்துள்ளார்.
அரசாங்க பணியாளர்கள் அரச வாகனங்களை தங்களது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தும் விதம் தொடர்பில் சில சுற்று நிருபங்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த வழிகாட்டுதல்களின் பிரகாரம் வாகனங்களை பயன்படுத்திக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்துளளார்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனவும், எவர் மீதேனும் குற்றச்சாட்டுக்கள் இருந்தால் அது குறித்து சட்ட ரீதியாக முறைப்பாடு செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.
அவ்வாறான விசாரணைகளில் அரசாங்கம் தலையீடு செய்யாது எனவும் சயாதீனமான முறையில் விசாரணைகள் நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தனது தாயரை பார்வையிட செல்லும் போதும் மரண வீடொன்றுக்கு செல்லும் பாதுகாப்பு போக்குவரத்து உள்ளிட்ட அரச சொத்துக்களை பயன்படுத்கின்றார் எனவும் இந்த விடயத்தினை எவ்வாறு விளக்க முடியும் ஊடகவியலாளர், அமைச்சர் விஜித ஹேரத்திடம் கேள்வி எழுப்பியிருந்தார்.





ரவி மோகன் பேசியதை கேட்டு கெனிஷா கண்ணீர்.. சொத்துக்கள் முடக்கம், பிரச்சனைகள் பற்றி எமோஷ்னல் Cineulagam

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

மறைந்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணனுக்காக சூப்பர் சிங்கர் மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்... வீடியோ இதோ Cineulagam

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri
