காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பொருள் - இரகசிய தகவலின் அடிப்படையில் சோதனை
இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி மன்னாரில் 20 மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் இன்று (7) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
விசேட சோதனை
மன்னாரில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் குற்றப்புலனாய்வு பிரிவு விசேட சோதனை நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது.
இதன்போது தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நடுக்குடா கடற்கரைக்கு அருகிலுள்ள 30வது காற்றாலை கோபுரத்திற்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 20 மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இந்த கேரள கஞ்சா பொதிகள் இந்தியாவிலிருந்து கடல் வழியாக கொண்டு வரப்பட்டு மறைத்து வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விடயம் தொடர்பாக மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam
