யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த வாகனத்தில் கஞ்சா: இருவர் கைது
வவுனியாவில் இரண்டுகோடி ரூபாய் பெறுமதியான 145 கிலோ கேரள கஞ்சாவினை கடத்திச்சென்ற இருவரைக் கைது செய்துள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கமைய யாழிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கூளர் ரக வாகனத்தை இன்று (07) பிற்பகல் வவுனியா ஓமந்தையில் அமைந்துள்ள சோதனை சாவடியில் வழிமறித்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அதில் சோதனைகளை மேற்கொண்டனர்.
இதன்போது குறித்த வாகனத்தில் பொதி செய்து மறைத்து வைக்கப்பட்டிருந்த 145 கிலோ கேரள கஞ்சாவினை மீட்டுள்ளதுடன், வாகனத்தையும், அதில் பயணித்த சாரதி உட்பட இருவரையும் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
மீட்கப்பட்ட கஞ்சாவின் பெறுமதி சுமார் இரண்டு
கோடி ரூபாய் இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்ததுடன், கைது செய்யப்பட்டவர்களை
மேலதிக விசாரணைகளின் பின்னர் நாளை நீதிமன்றில் முன்னிறுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.








விஜய் டிவியில் இருந்து பிரியங்காவிற்கு கொடுக்கப்பட்ட பரிசு.. பதறிய தொகுப்பாளினி, அப்படி என்ன கொடுத்தாங்க? Cineulagam
