இலங்கைக்கு கடத்தும் நோக்கில் ஆம்புலன்ஸில் கொண்டுவரப்பட்ட கஞ்சா!
இலங்கைக்கு ஆம்புலன்ஸ் மூலம் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 200 கிலோ கஞ்சா கடத்த முயன்றதாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ஆந்திராவில் இருந்து இலங்கைக்கு நாகை வழியாக கஞ்சா கடத்ததுவதாக வந்த ரகசிய தகவலையடுத்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தஞ்சை சரக டி.ஐ.ஜி உத்தரவின் பேரில் ஏ.டி.எஸ்.பி ஜெயச்சந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தஞ்சை - நாகை ஆகிய மாவட்டங்களில் பொலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நாகையில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை நிறுத்தி பொலிஸார் சோதனை செய்தனர். இதன்போது ஆம்புலன்ஸில் 200 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதனை அடுத்து தனிப்படை பொலிஸார் ஆம்புலன்ஸை ஓட்டி வந்த நாகையைச் சேர்ந்த மார்சல் டெரன்ஸ் ராஜா என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், பொலிஸாரிடம் இருந்து தப்பிக்க ஆம்புலன்ஸ் வாகனத்தில் கஞ்சா கடத்தியதாக தெரிவித்தார். மேலும் ஆந்திராவில் இருந்து நாகை வழியாக படகு மூலம் இலங்கைக்கு கடத்த இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடத்தப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ஒரு கோடி என பொலிஸார் தெரிவித்தனர். மேலும் இந்த கடத்தல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
