யாழிலிருந்து கொழும்பு கொண்டு செல்லப்பட்ட கஞ்சா மீட்பு: இருவர் கைது(Photos)
யாழிலிருந்து கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்ட 250 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா, ஈரப்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கூலர் ரக வாகனம் ஒன்றினை இன்று பிற்பகல் (15.01) வவுனியா, ஈரப்பெரியகுளம் சோதனை சாவடியில் வழிமறித்து சோதனை செய்த போது குறித்த வாகனத்தில் கஞ்சா மறைத்துக் கொண்டு செல்லப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த வாகனத்தை முழுமையாகச் சோதனை செய்த போது பொதி செய்யப்பட்ட நிலையில் 250 கிலோ கஞ்சா மீட்கப்பட்டது.
இதனை உடமையில் வைத்திருந்தமை மற்றும் எடுத்துச் சென்றமை தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக
விசாரணைகளின் பின் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் முற்படுத்த
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஈரப்பெரியகுளம் பொலிஸார் மேலும்
தெரிவித்துள்ளனர்.


விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan
திடீரென ஜனனியை தள்ளி அடிக்க சென்ற கதிர்... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam