கஞ்சா ஆபத்தான ஔடதம் அல்ல:டயனா கமகே
கஞ்சா ஆபத்தான ஔடதம் அல்ல என கடந்த ஆண்டு டிசம்பர் மாம் நடைபெற்ற ஊடக சுகாதார அமைப்பின் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே (Diana Gamage) தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் கஞ்சாவுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதால், கஞ்சாவை ஏற்றுமதி செய்ய இலங்கைக்கு இருந்து வந்த தடையும் நீங்கியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு கஞ்சா மூலம் கிடைக்கும் அந்நிய செலாவணியின் பெறுமதி 140 பில்லியன் டொலர்கள் என ஐரோப்பிய அபிவிருத்தி நிதியம் மதிப்பீடு செய்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் யோசனை நிறைவேற்றி பின்னர் கஞ்சா பயிர் செய்கையை சட்டமாக்கி, ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளை வழங்குவதற்கான சட்டமூலம் தயாரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

எலோன் மஸ்க்கை தோற்கடித்து உலகின் மிகப்பெரிய நிறுவனம் ஒன்றை உருவாக்கியவர்... அவரது தொழில் News Lankasri
