யால வனாந்தரப் பகுதியில் பாரியளவான கஞ்சா பயிர்ச்செய்கை அழிப்பு
யால பாதுகாக்கப்பட்ட தேசிய வனாந்தரப் பகுதியில் பாரியளவில் மேற்கொள்ளப்பட்டிருந்த கஞ்சா பயிர்ச்செய்கையொன்று விமானப் படையினரின் உதவியுடன் அழிக்கப்பட்டுள்ளது.
விமானப்படையினரின் ஆளில்லா உளவு விமானங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது யால வனாந்திரப் பகுதியின் ஏழு இடங்களில் சட்டவிரோத கஞ்சா பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டிருந்தது.
ஒன்றரை லட்சம் அளவிலான
இதனையடுத்து நேற்றைய தினம்(27) ட்ரோன் விமானங்கள் மூலம் குறித்த கஞ்சா பயிர்ச் செய்கையை அழிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

விமானப்படையினரின் உதவியுடன் தனமல்வில பொலிசார் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர். இதன்போது சுமார் ஒன்றரை லட்சம் அளவிலான கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதற்கிடையே யால வனாந்தரப் பகுதியில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத கஞ்சா பயிர்ச் செய்கைக்கு வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாக பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் அழிக்கப்பட்ட சட்டவிரோத கஞ்சா பயிர்ச்செய்கைகளில் ஒரு பகுதி தனமல்வில வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் அலுவலகத்தை அண்மித்திருந்த இடமொன்றில் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri