அனோஜனின் விடுதலைக்காக மெழுகுவர்த்தி போராட்டம்! யாழில் திரண்ட மக்கள்
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனை விடுதலை செய்யக் கோரி யாழ்ப்பாணத்தில் மெழுகுவர்த்திப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் இன்று (21) மாலை 5 மணியளவில் இந்தப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.
மெழுகுவர்த்திப் போராட்டம்
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிவராசா அனோஜனுக்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை குறைத்து, அவரை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தியே இந்த மெழுகுவர்த்திப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அவருக்கு மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பு வழங்கி உயிரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.







