அம்பலாங்கொடையில் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சி
அம்பலாங்கொடை, கஹவ பகுதியில் இன்று (21) மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நபர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் பொலிஸாரிடம் வழங்கியுள்ள தகவலின்படி, நண்பகல் வேளையில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு சந்தேகநபர்கள் அவரை அணுகி துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு
எனினும், சந்தேகநபர்களை அவதானித்த குறித்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றதால் துப்பாக்கிச் சூடு நடத்தும் முயற்சி தோல்வியடைந்துள்ளது.

இதனையடுத்து சந்தேகநபர்கள் அவரைத் துரத்திச் சென்ற போதிலும், அவர் சென்ற பாதையை கண்டறிய முடியாததால் அவரை பின்தொடர முடியாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீதியாகொட பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த நபர் அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்டவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.