சுங்கப்பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த புற்றுநோய் சிகிச்சை இயந்திரம் விடுவிப்பு
கொழும்புத்துறைமுகத்தில் சுங்கப்பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த புற்றுநோய் சிகிச்சைக்கான இயந்திரம் ஒன்று நேற்று விடுவிக்கப்பட்டுள்ளது.
மஹரகமயில் அமைந்துள்ள அபேக்ஷா புற்றுநோய் மருத்துவமனைக்கான இயந்திரம் ஒன்று திருத்துவதற்காக இறக்குமதி செய்யப்பட்டிருந்தது.
எனினும் நீண்ட நாட்களாக அதனை சுங்கப்பிரிவினர் தடுத்து வைத்திருந்தனர்.

தனியார் நிறுவனத்தின் தாமதம்
இந்நிலையில், குறித்த இயந்திரம் புற்று நோய் வைத்தியசாலைக்கு தேவையான உபகரணங்களில் ஒன்று என்பதாக அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் எழுத்து மூலம் உறுதிப்படுத்தியதாகவும் அதன் பின்னரே அந்த இயந்திரம் உடனடியாக விடுவிக்கப்பட்டதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
உபகரணங்களை இறக்குமதி செய்த தனியார் நிறுவனத்தின் தாமதம் காரணமாகவே குறித்த இயந்திரம் நீண்ட நாட்களாக சுங்கப் பிரிவின் பொறுப்பில் வைக்கப்பட்டிருந்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மூன்று முடிச்சு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நியாஸ் கான் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
மீண்டும் பிளாக்பஸ்டர் இயக்குநருடன் இணையும் அஜித்.. இதற்காகதான் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் Cineulagam
விஜய்யை நேரில் பார்த்ததும் காவேரி செய்த செயல், சாரதாவிற்கு தெரிந்த உண்மை... மகாநதி சீரியல் Cineulagam