மட்டக்களப்பில் வாய்ப்புற்று நோயை தடுக்க விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆரம்பம்
சுகாதார வெகுஜன ஊடக அமைச்சர் வைத்திய கலாநிதி நலிந்த ஜெயதிஸ்ஸவின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வேகமாக அதிகரித்து வரும் வாய்ப்புற்று நோயை தடுக்கும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர் முரளீஸ்வரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பல் வைத்திய பிரிவின் வழிகாட்டலில் பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தினால் இத்திட்டம் இன்று(05) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
வாய்ப்புற்றுநோய் வேகமாக அதிகரிப்பு
மட்டக்களப்பு மாவட்ட தொற்றா நோய் தடுப்பு நிபுணர் வைத்திய கலாநிதி இ.உதயகுமார் தலைமையில் இன்று காலை மட்டக்களப்பு பஸ் தரிப்பு நிலையத்தில் குறித்த வேலை திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆர் முரளீஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
மட்டக்களப்பு போதனை வைத்தியசாலை முகத்தாடை சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் நவீன் மாவட்ட பல் வைத்திய பொறுப்பதிகாரி டாக்டர் எஸ் கோகுல ரமணா மட்டக்களப்பு மாவட்ட புற்றுநோய் விழிப்புணர்வு சங்க தலைவர் வைத்திய கலாநிதி பேராசிரியர் இ. கருணாகரன். இலங்கை போக்குவரத்து சபை மட்டக்களப்பு சாலை முகாமையாளர் கந்தசாமி ஸ்ரீதரன்உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள், கடற்றொழிலாளர்கள் மத்தியில் குறித்த வாய்ப்புற்றுநோய் வேகமாக அதிகரித்து வருவதாக வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு பேருந்து தரிப்பு நிலையத்திலிருந்து வெளியிடங்களுக்கு செல்லும் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு குறித்த வாய்ப்பற்று நோய் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் இடம்பெற்றன.
மாவட்டத்தில் குறித்த வாய்ப்புற்று நோயை கட்டுப்படுத்தும் முகமாக விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெறவுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் முரளீஸ்வரன் தெரிவித்தார்.




நல்லூர் கந்தசுவாமி கோவில் 10ஆம் நாள் திருவிழா




