பொதுத் தேர்தலை முன்னிட்டு நூற்றுக்கணக்கான ஊழியர்களின் விடுமுறை இரத்து
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு கொழும்பு தீயணைப்பு சேவை திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக பிராந்திய தீயணைப்பு அதிகாரி ரோஹன நிஷாந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, இன்று (13) முதல் (15) வரை விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தீயணைப்பு சேவை திணைக்கள தலைமையகம், ஹெட்டியாவத்தை, கிரேண்ட்பாஸ், வெள்ளவத்தை, கோட்டை மற்றும் மாதிவெல உப நிலையங்களில் உள்ள சுமார் 300 ஊழியர்களின் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது.
தீயணைப்பு வாகனங்கள் தயார்
அத்தோடு, பிரதான வாக்களிப்பு நிலையங்களாகப் பயன்படுத்தப்படும் கொழும்பு ரோயல் மற்றும் டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி மைதானங்களில் உப சேவை நிலையங்களுக்கு மேலதிகமாக இரண்டு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் இரண்டு நோயாளர் காவு வண்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 50 தீயணைப்பு வாகனங்கள், உயிர்காக்கும் வாகனங்கள் மற்றும் நோயாளர் காவுவண்டிகள், 17 வாகனங்கள் எந்த நேரத்திலும் அனுப்பி வைக்க தயார் நிலையில் உள்ளதாகவும் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri
