அர்ஜுன் அலோசியஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனுமதி இரத்து! ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை
பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸினால் நடாத்தப்படும் W.M. மென்டிஸ் நிறுவனத்தின் உற்பத்தி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க வழங்கப்பட்ட உரிமம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
அமைச்சரவை இது குறித்து தீர்மானித்துள்ளது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளரான அர்ஜூன் அலோசியஸிற்கு சொந்தமான W.M.மென்டிஸ் நிறுவனத்திற்கு, மதுபானம் தயாரிப்பதற்கான அனுமதியை கலால் வரி திணைக்களம் அண்மையில் மீள வழங்கியது.
கடும் நிபந்தனைகளுடன் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கலால் வரித் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் கபில குமாரசிங்க குறிப்பிட்டார்.
அரசுக்கு செலுத்த வேண்டிய வரிப் பணத்தை செலுத்தத் தவறியமையால், 2018 ஆம் ஆண்டு மென்டிஸ் நிறுவனத்தின் மதுபான உற்பத்திக்கான அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், மீளவும் வழங்கப்பட்ட அனுமதியை இரத்து செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 6 மணி நேரம் முன்

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
