கொழும்பு கப்பல்துறை மற்றும் நோர்வே நிறுவனத்துக்கிடையிலான ஒப்பந்தங்கள் இரத்து
கொழும்பு கப்பல்துறை மற்றும் நோர்வேயின் (Edda Wind) நிறுவனத்துக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட கப்பல் கட்டும் ஒப்பந்தங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
நாட்டில் நிலவும் ஸ்திரமற்ற பொருளாதார மற்றும் நிதி நிலைமை காரணமாகவே இந்த தீர்மானத்தை எடுக்க நேரிட்டதாக கொழும்பு கப்பல்துறை அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு நாணய பணப்புழக்கத்தின் பற்றாக்குறை
நாட்டில் வெளிநாட்டு நாணய பணப்புழக்கத்தின் குறிப்பிடத்தக்க பற்றாக்குறை காரணமாக, தேவையான உத்தரவாதங்களை தொடர்ந்து வழங்குவது மற்றும் கொள்வனவாளர்களிடம் இருந்து கொடுப்பனவுகளைப் பெறுவது சாத்தியமில்லை என்று கொழும்பு கப்பல்துறை தெரிவித்துள்ளது.
இத்தகைய சூழலில், இந்த இரண்டு திட்டங்களையும் தொடர்வது குறிப்பிடத்தக்க
அபாயங்கள் மற்றும் நிச்சயமற்ற தன்மைகளை விளைவித்திருக்கலாம்.
எனவேதான் திட்டங்கள் ரத்துச் செய்யப்பட்டன என்று கொழும்பு கப்பல்துறை குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில் Edda Wind உடனான ஒப்பந்தங்களை ரத்து செய்வதற்கான விதிமுறைகள்
மற்றும் நிபந்தனைகள் கட்சிகளிடையே இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.