யுகதனவி உடன்படிக்கையை உடன் ரத்துச் செய்! : லால்காந்தா
அமெரிக்க நிறுவனத்துடன் கைச்சாத்திடப்பட்டுள்ள ‘யுகதனவி’ உடன்படிக்கையை உடனடியாக ரத்துச் செய்யப்பட வேண்டும் என்று ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.டி. லால்காந்தா (K. D. Lalkantha) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் மேலும் தெரிவித்ததாவது,
"யுகதனவி உடன்படிக்கை தொடர்பில் நாடாளுமன்றத்துக்கோ, அமைச்சரவைக்கோ அல்லது நாட்டு மக்களுக்கோ எதுவும் தெரியாது. முறைகேடான முறையிலேயே கைச்சாத்திடப்பட்டுள்ளது.
அந்த உடன்படிக்கை எமது நாட்டுக்குப் பாதகமானது எனவே ஒப்பந்தம் ரத்துச் செய்யப்பட வேண்டும். அவ்வாறு இரத்துச் செய்ய முடியுமா எனச் சிலர் கேட்கலாம். முடியும் என்பதே பதில் ஏனெனில் மக்களின் அனுமதியின்றி எதனையும் செய்ய முடியாது.
எனவே, அரசு மீளப் பெறவேண்டும், மக்கள் ஆணையை மதித்துச் செயற்பட வேண்டும். சிலவேளை மேற்படி திட்டத்துக்காக அரசு கப்பம் பெற்றிருக்கக்கூடும் அதனால்தான் பின்வாங்கத் தயங்குகின்றனர்" எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.