திருட்டு ஒப்பந்தத்தை ரத்துச் செய்! பரவலாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேசங்களிலும் மின்சாரம்,எண்ணெய் என்பனவற்றின் சுயாதிபத்திதுவத்தை காட்டிக்கொடுக்கும் திருட்டு ஒப்பந்தத்தை ரத்துச் செய்யுமாறு குறிப்பிட்டு தொழிலாளர் மத்திய நிலையத்தினால் பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு முன்னிலை சோசலிசக் கட்சியினாலும் அமெரிக்கா, சீனா,இந்திய மரணப்பொறியில் மக்களை சிக்கவைக்கும் ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராவோம் என்றும் எழுதப்பட்டுள்ள சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கந்தளாய், திருகோணமலை மற்றும் தம்பலகாமம் போன்ற பிரதேசங்களின் சந்திகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை,சிங்கள மற்றும் தமிழ் பொழிகளிலும் அச்சிடப்பட்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
