லெபனான் - இஸ்ரேல் மோதல் தீவிரம்: கனடா விடுத்துள்ள முக்கிய செய்தி
லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், லெபனானில் உள்ள கனேடிய வாழ் மக்களை நாட்டுக்கு திரும்புமாறு அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கோரிக்கை விடுத்துள்ளார்.
கனடா குடியுரிமையாளர்கள் அனைவரும் லெபனானுக்கு அனுப்பப்பட்டுள்ள சிறப்பு விமானங்களில் விரைவில் பாதுகாப்பாக நாடு திரும்புமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
லெபனானின் நிலைமைகள் மோசமாகி வரும் நிலையில், 1,000க்கும் மேற்பட்டோர் ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கனடா செல்ல வாய்ப்பு
இந்நிலையில் லெபனானில் இன்னும் 6,000 பேர் இருப்பதாகவும், வார இறுதியில் மேலும் 2,500 பேரை தொடர்பு கொள்ளும் முயற்சிகள் நடைபெறுவதாகவும் ட்ரூடோவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும் கனடா விமானங்களில் பயண ஆசனங்கள் மீதமிருப்பதால், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா, மற்றும் சில ஐரோப்பிய நாடுகளின் குடியுரிமையாளர்களுக்கும் கனடா செல்ல வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது .
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |