கனடாவில் இருந்து இலங்கை வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில், 180 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ஹஷிஷ் போதைப்பொருளுடன் வெளிநாட்டு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலையத்திலிருந்து போதைப்பொருளை எடுத்துச் செல்ல முயன்றபோது, சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 21 வயதான கனேடிய பிரஜை என தெரியவந்துள்ளது.
ஹஷிஷ் பொட்டலங்கள்
அவர் இன்று காலை டுபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

சந்தேக நபரின் பயணப்பெட்டியில் 6 பொலித்தீன் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 18 கிலோகிராம் 253 கிராம் எடையுள்ள 72 சிறிய ஹஷிஷ் பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் போதைப்பொருள் கையிருப்பும் மேலதிக விசாரணைக்காக விமான நிலையப் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்கம் தெரிவித்துள்ளது.
தீவு நாடொன்றை மொத்தமாக தாக்கவிருக்கும் புயல்: ஹொட்டல் ஒன்றில் சிக்கிய 200 பிரித்தானியர்கள் News Lankasri
2011ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த வேலாயுதம், 7ஆம் அறிவு.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா Cineulagam
இந்தியாவுக்கு எதிராக புலம்பெயர் டாக்சி ஓட்டுநரின் மகன்: அவுஸ்திரேலிய அணியில் இந்திய வம்சாவளி பவுலர் News Lankasri