பிரதமர் ஹரிணியை சந்தித்த கனடிய உயர்ஸ்தானிகர்
இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின் மற்றும் அந்நாட்டுத் தூதுக்குழுவினர் நாடாளுமன்றில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பின் போது, இலங்கைக்கும் கனடாவிற்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வளர்த்துக் கொள்வதற்கான ஒரு வழிமுறையாக, இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை உயர்ஸ்தானிகர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை மற்றும் கனடா பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கூட்டாண்மையை வளர்ப்பதன் ஊடாக, இரு நாடுகளின் கல்வித் துறையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் இரு தரப்பினரும் கவனம் செலுத்தியுள்ளனர்.
திறன் அபிவிருத்தி மற்றும் அறிவுப் பரிமாற்றம் உள்ளிட்ட தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
கல்வி வாய்ப்புகள் மற்றும் நிறுவன ரீதியான கூட்டாண்மைகளை ஊக்குவிப்பதன் ஊடாக, விஞ்ஞானக் கல்வித் துறையிலான ஒத்துழைப்பை மேலும் வளர்த்துக் கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கு கனடாவில் வசிக்கும் இலங்கைச் சமூகம் ஆற்றி வரும் விசேட பங்களிப்பு குறித்தும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்குப் பங்களிக்கக்கூடிய துறைகளில் விசேட கவனம் செலுத்தி, கனடிய முதலீடுகளை அதிகளவில் நாட்டிற்கு ஈர்த்துக் கொள்வதற்கு இலங்கை கொண்டுள்ள ஆர்வத்தையும் பிரதமர் வெளிப்படுத்தியுள்ளார்.
நிகழ்ச்சியில் மிஷ்கின் என்னை தவறாக தொட்டாரா?... சர்ச்சைக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் விளக்கம் Cineulagam
குக் வித் கோமாளி புகழ் அஷ்வினுக்கு நாளை (நவம்பர் 20) திருமணம்... பெண், பிரபல இயக்குனரின் பேத்தி... Cineulagam
கனடாவின் Most Wanted பட்டியலில் முதலிடம் - கோல்டி பிராரை பிடிக்க ரூ.1.6 கோடி பரிசு அறிவிப்பு News Lankasri