தங்கத்தின் விலையில் திடீர் சரிவு! வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி
உலக சந்தை மற்றும் உள்நாட்டு சந்தைகளில் தங்கத்தின் விலை திடீர் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இதற்கமைய, உலக சந்தையில் தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,526 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
உலக சந்தையின் திடீர் விலை வீழ்ச்சி இலங்கையிலும் தங்கத்தின் விலையில் மாற்றத்தை பதிவு செய்துள்ளது.
விலை விபரம்
இதன்படி, கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரப்படி, இன்று (20) 7,000 ரூபாயினால் குறைவடைந்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.
24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 345,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 317,400 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 352,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 323,800 ரூபாயாகவும் விற்பனையாகியுள்ளது.
திடீர் வீழ்ச்சிக்கு காரணம்
அமெரிக்காவில் பணவீக்கம் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருப்பதால், அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடும் என்றும், வட்டி இன்றிய தங்கத்தின் தேவை குறையும் என்பதனால் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனவே அடுத்த மூன்று மாதங்கள் வரை தங்கம் விலை குறையலாம் என்றும், தங்கத்தில் முதலீடு செய்ய இது சரியான நேரம் என்றும் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
தனிநபர்களினால் வங்கி கணக்குகளில் குவிக்கப்படும் பணம்! அஸ்வெசும திட்டத்தில் கட்டாயப்படுத்தப்படும் நடைமுறை
கோடீஸ்வரராக வேண்டியவர்... ரிஷி சுனக்குடன் பணியாற்ற Anthropic பங்குகளை விற்றுவிட்ட பிரித்தானியர் News Lankasri
கனடாவின் Most Wanted பட்டியலில் முதலிடம் - கோல்டி பிராரை பிடிக்க ரூ.1.6 கோடி பரிசு அறிவிப்பு News Lankasri