இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள எச்சரிக்கை
மோசடி நடவடிக்கை ஒன்று தொடர்பில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலயம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமூக ஊடகங்களில் இடம்பெற்று வரும் ஆட்சேர்ப்பு மோசடி தொடர்பிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“கனடா அரசாங்கத்தின் ஆட்சேர்ப்பு பிரச்சாரம் 2022” என்ற தலைப்பில் சமூக ஊடகங்களில் பரவும் விளம்பரங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் அது போலியானதெனவும் கனேடிய உயர்ஸ்தானிகராலயம் டுவிட்டர் பதிவொன்றை பதிவிட்டு தெரிவித்துள்ளது.
குறித்த போலி வேலைவாய்ப்பு பிரச்சாரம் நடவடிக்கையில், ஆட்சேர்ப்பு மூலம் உடனடி பணி அனுமதிகளை வழங்கப்படுவதாக உறுதியளித்து மக்களை ஏமாற்றுவதாக தெரியவந்துள்ளதென கனேடிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்த பிரச்சாரம் பொய்யானது என மீண்டும் வலியுறுத்திய இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலயம், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறான மோசடிகள் மற்றும் குடிவரவு மோசடிகளில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளுமாறும் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒன்லைன் குடியேற்ற மோசடிகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க உயர் ஸ்தானிகராலயம் இணைப்பொன்றையும் வெளியிட்டுள்ளது.
900 கடந்த இறப்பு எண்ணிக்கை... இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள் News Lankasri
பறப்பதற்கு பாதுகாப்பற்ற 6,000 விமானங்கள்... ஸ்தம்பிக்கும் பிரித்தானிய விமான நிலையங்கள் News Lankasri