கனேடிய அரசாங்கம் ஒவ்வொரு சிகரெட்டிலும் அபாய எச்சரிக்கையை அச்சிட முடிவு
ஒவ்வொரு சிகரெட்டிலும் புகைப்பிடிப்பதன் தீங்கு குறித்த அபாய எச்சரிக்கையை அச்சிடுவதைக் கட்டாயமாக்க கனேடிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
சிகரெட் பெட்டிகள் மீது புகைப்பதால் உடல்நலத்துக்கு ஏற்படும் அபாயம் குறித்த எச்சரிக்கையை அச்சிடுவது 20 ஆண்டுகளுக்குக் கனடாவில் கட்டாயமாக்கப்பட்ட போதும், தற்போது உலகிலேயே முதல்முறையாக இவ்வாறானதொரு நடவடிக்கையைக் கனடா எடுத்துள்ளது.
இது குறித்து மனநலத் துறை அமைச்சர் கரோலின் பெனட் கூறுகையில், ‘சிகரெட் பெட்டிகள் மீது அபாய எச்சரிக்கை பொறிக்கப்படுவதால் ஏற்படக்கூடிய தாக்கம் இத்தனை ஆண்டுகளில் மறைந்துபோயிருப்பதற்கான வாய்ப்புள்ளது.
இந்தச் சூழலில், ஒவ்வொரு சிகரெட்டிலும் அபாய எச்சரிக்கை இருந்தால், அந்தத் தகவல் இன்னும் அதிக அளவில் மக்களைச் சென்று சேரும் என கூறினார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய உலக செய்திகளின் தொகுப்பு,

எங்கள் நாட்டில் உன்னை பணக்காரர் ஆக விடமாட்டேன்: புலம்பெயர்ந்தோர் ஒருவர் ஜேர்மனியில் சந்தித்த அதிர்ச்சி News Lankasri

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri
