செம்மணியை பார்வையிட வந்து பாதியில் திரும்பிய கனேடிய தூதரக பிரதிநிதிகள்
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப்புதைகுழியை பார்வையிடுவதற்காக இலங்கைக்கான கனேடியத்தூதரகத்தின் பிரதிநிதிகள் வருகை தந்திருந்த போதிலும், அரசிடமிருந்து முறையான அனுமதி கிடைக்காத காரணத்தால் சித்துப்பாத்தி இந்து மயான வாயில் வரை வந்து திரும்பிச்சென்றுள்ளனர்.
செம்மணி மனிதப்புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப்பணிகளின் இறுதி நாளான 56 ஆம் நாள் அகழ்வு நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.
மதிய உணவு இடைவேளையின் போது கனேடியத்தூதரக அதிகாரிகள் அங்கு வருகை தந்திருந்தனர்.
அமைச்சு ஊடாக நிர்வாக ரீதியான கோரிக்கை
செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவதற்காகக் கனேடியத் தூதரகம் தரப்பில் உரிய அமைச்சு ஊடாக நிர்வாக ரீதியான கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன.

எனினும், இலங்கை அரசிடமிருந்து அதற்குரிய அனுமதி கிடைக்கவில்லை. அகழ்வுப் பணி நடைபெறும் பகுதிக்கு வருகை தருவதாக இருந்தால், முதலில் அரசின் அனுமதியைப் பெற்று நீதிமன்றத்திடம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆனால், கனேடியத் தூதுவராலயத்துக்கு அரசின் அனுமதி கிடைக்காததால், நீதிமன்றத்தில் முறையான விண்ணப்பங்கள் எவையும் சமர்ப்பிக்கப்படவில்லை.
இதன் காரணமாக, செம்மணி வாயில் வரை வருகை தந்த கனேடியத் தூதுவராலயப் பிரதிநிதிகள், அரசின் அனுமதி பெறப்படாத சூழ்நிலையில் புதைகுழிப் பகுதிக்குப் செல்லாமல் அங்கிருந்து திரும்பிச்சென்றுள்ளனர்.
நடைபயணமாக அழைத்து வரும் ஷிரான் பாசிக்கின் உயிருக்கு ஆபத்து! நீதிமன்றம் பொலிஸாருக்கு பிறப்பித்த உத்தரவு
கணேமுல்ல சஞ்சீவ படுகொலையுடன் தொடர்புடைய நபரின் வாக்குமூலம்! கொழும்பு வீடொன்றில் சிக்கிய ஆபத்தான பொருள்
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 4
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 2 நாட்கள் முன்
தண்ணீரிலேயே வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட சிறுவன்: வைரல் வீடியோவை பார்த்து உதவிய அனந்த் அம்பானி Manithan