கனடாவிலிருந்து ஈழத் தமிழர் நாடு கடத்தப்படும் விவகாரத்தில் தலையிடப் போவதில்லை
கனடாவிலிருந்து ஈழத் தமிழர் ஓருவரை நாடு கடத்தும் விவகாரத்தில் தாம் தலையீடு செய்யப் போவதில்லை என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
கடந்த 2010ம் ஆண்டில் எம்.வீ. சன்சீ என்ற கப்பல் ஊடாக கனடாவிற்குள் பிரவேசித்து ஏதிலி அந்தஸ்து கோரிய குமார் துரைசிங்கம் என்ற ஈழத் தமிழர் தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதில் ஆபத்துக்கள் காணப்படுவதனை ஒப்புக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் நாடு கடத்தல் குறித்த நீதிமன்ற விவகாரங்களில் தாம் எந்தவித தலையீடுகளையும் செய்யப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
குமார் துரைசிங்கத்தின் தலைவிதியை தீர்மானிக்கக் கூடிய சிறந்த இடம் நீதிமன்றங்களேயாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் சன்.சீ கப்பலில் வந்திறங்கி ஏதிலி அந்தஸ்து கோரிய ஈழத் தமிழர்களுக்காக தாம் குரல் கொடுத்துள்ளதாக அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இவ்வாறு நாடு கடத்தப்பட்ட ஓர் தமிழர் இலங்கையில் கொல்லப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட சம்பவமொன்று பதிவாகியிருந்தது என தெரிவித்துள்ளார். எனினும் ஏதிலிக் கோரிக்கையாளர் ஓருவரை நாடு கடத்துவதா இல்லையா என்பதை தீா்மானிக்கக் கூடிய சிறந்த இடம் நீதிமன்றங்களே என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, குமார் துரைசிங்கத்தின் ஏதிலி கோரிக்கை நிராகரிக்கப்பட்டாலும் கடந்த 16 ஆண்டுகளாக ஸ்காப்ரோ பகுதியில் தச்சுப் பணியில் ஈடுபட்டு வருகின்றார்.
தனது மனைவியும் மூன்று பிள்ளைகளும் இலங்கையில் வாழ்ந்து வரும் நிலையில் மன அழுத்தம் காரணமாக மதுபானம் அருந்துவதாக குமார் துரைசிங்கம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் மது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் துரைசிங்கத்தை நாடு கடத்தும் முனைப்புக்கள் முடுக்கிவிடப்பட்டது.
கடந்த 16 ஆண்டுகளாக கனடாவில் வாழ்ந்து வருவதாகவும் தம்மை ஓர் கனடியர் என:றே உணர்வதாகவும் துரைசிங்கம் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டால் பல்வேறு சவால்களை எதிர்நோக்க நேரிடும் என அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.
குணசேகரன் அடுத்த திட்டம், மதிவதனியை பார்க்க வந்த ராணா... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri