இலங்கையில் கனடாவுக்கு அனுப்புவதாக ஏமாற்றும் மோசடிகள் அதிகரிப்பு
கனடாவில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக பண மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இவ்வாறு பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பல மில்லியன் ரூபா மோசடி செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்வாறான மோசடியில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் தகவல் தெரிவிக்குமாறு பாதிக்கப்பட்டவர்களிடம் பணியகம் கேட்டுள்ளது.
பண மோசடி
011 2 864 241 அல்லது 011 2 864 123 என்ற தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 1989 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல் வழங்க முடியும்.
அண்மைய காலங்களில் வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக பல கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட பணத்தை மோசடி செய்த பலர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.