புலம்பெயர்தல் திட்டம் குறித்து முக்கிய அறிவிப்பொன்றினை வெளியிடவுள்ள கனடா
2022 -2024 ஆம் ஆண்டுகளுக்கான புலம்பெயர்தல் திட்டம் குறித்து கனடா முக்கிய அறிவிப்பொன்றினை வெளியிடவுள்ளது.
இதற்கமைய, 2022 -2024 ஆம் ஆண்டுகளுக்கான புலம்பெயர்தல் திட்டத்தை கனடா, அடுத்த மாதம் 2022, பெப்ரவரி 11 திகதி அறிவிக்கவுள்ளது.
குறித்த திட்டத்தை கனடா அறிவிக்கும் போது முக்கிய மாற்றம் ஒன்றை வெளியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டின் கனடாவுக்கான புலம்பெயர்தல் இலக்கு, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான அறிவிப்பு மற்றும் பொருளாதார, குடும்ப மற்றும் மனிதநேய புலம்பெயர்தல் திட்டங்களின் கீழ் எத்தனை பேர், பிரிவு ஒன்றின் கீழ் கனடாவுக்கு புதிதாக வரவேற்கப்படவுள்ளனர் போன்ற விடயங்கள் அந்த அறிவிப்பில் இடம்பெறவுள்ளது.
இந்த அறிவிப்பு கடந்த நவம்பர் மாதம் 1ஆம் திகதி வெளியாகவிருந்த நிலையில், 2021 ஆண்டு கனடா தேர்தலையொட்டி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையினால் அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், இம்மாதம் 31ஆம் திகதி மீண்டும் நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.
ஆகவே, புலம்பெயர்தல் மட்ட திட்டம் குறித்த அடுத்த அறிவிப்பு, அதாவது இரண்டாவது மட்ட திட்டம் குறித்த அறிவிப்பு, இந்த ஆண்டு நவம்பர் 1ஆம் திகதி வெளியாகலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.