இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு கனடா கடும் எதிர்ப்பு
இஸ்ரேலிய அரசாங்கம் மேற்குக் கரைப் பகுதியில் முன்னெடுத்து வரும் இஸ்ரேலிய குடியேற்ற விஸ்தரிப்புக்கு கனடா எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
மேற்குக்கரையில் இஸ்ரேலிய குடியேற்றவாசிகளின் வன்முறைகள் அதிகரித்து வருவதற்கு கனடா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோதக் குடியிருப்புகளின் விரிவாக்கம் “உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச சட்டத்தின் கீழ் இந்த யூதக் குடியிருப்புகள் சட்டவிரோதமானவை. மேலும், இவை பிராந்தியத்தின் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கான வாய்ப்புகளை கடுமையாக சீர்குலைப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.
இஸ்ரேலிய குடியேற்றவாசிகளின் தாக்குதல்களும், சட்டவிரோதக் குடியிருப்புகளின் விரிவாக்கமும் முன்னெப்பாதும் இல்லாத அளவுக்கு மிக உச்சத்தை எட்டியுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
2023 அக்டோபர் முதல் மேற்குக்கரையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 1,100-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
சர்வதேச மனிதநேயச் சட்டங்கள் மதிக்கப்பட வேண்டும் எனவும், அனைத்துக் குடிமக்களும் பாதுகாப்பான சூழலில் வாழ்வது உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் கனடா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இந்த கருத்து தொடர்பில் இஸ்ரேலிய அரசாங்கம் இதுவரையில் பதில் எதனையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.