கனடாவில் ஊதிய உயர்வு குறித்து வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு
ஏப்ரல் 1ஆம் திகதி முதல், கனடாவில் குறைந்தபட்ச ஊதியம் அதிகரிக்கப்படவுள்ளதாக பெடரல் அரசு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, ஒரு மணி நேரத்துக்கான குறைந்தபட்ச ஊதியம் 15.55 டொலர்களிலிருந்து 16.65 டொலர்களாக உயர்ந்துள்ளது.
இந்த ஊதிய உயர்வு, வங்கிகள், தபால் மற்றும் கூரியர் நிறுவனங்கள் மாகாணங்களுக்கிடையிலான விமான, சாலை, ரயில் மறும் படகு போக்குவரத்து உட்பட, பெடரல் அரசால் கட்டுப்படுத்தப்படும் தனியார் துறை நிறுவனங்கள் அனைத்திற்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊதிய உயர்வு ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.
