ட்ரம்ப் விதிக்கும் வரிகள்..! கனடா எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை
உள்நாட்டு வர்த்தக தடைகளை நீக்குவதன் மூலம் அமெரிக்க விதிக்கும் வரிகளை சமாளிக்கும் வகையில் கனடா அரசு புதிய சட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக பிரதமர் மார்க் கார்னி (Mark Joseph Carney) தெரிவித்துள்ளார்.
அதன்படி, கனடா உள்நாட்டில் முழுமையான வர்த்தக சுதந்திரத்தை ஏற்படுத்த எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதிக்குள் சட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
கனடாவில் 10 மாகாணங்கள், 3 பிரதேசங்களில் மாறுபட்ட வர்த்தக விதிகள் உள்ளன. இதனால் பணிகள் தாமதம் ஆகின்றன.
பொருளாதார வளர்ச்சி
இந்தநிலையில், கார்னியின் திட்டம் மூன்று முக்கிய வழிகளில் செயல்படும்.1.ஒன்றிய மாகாண விதிகளை ஒரே மாதிரியாக்குதல் 2.ஒரு மாகாணம் மற்றொரு மாகாண விதிகளை ஏற்கும் முறைமை 3.தேசிய அளவில் ஒரே விதிகளை உருவாக்குதல்
பிரதமரின் ஆய்வின்படி, உள்நாட்டு வர்த்தக தடைகளை நீக்குவதால் 15% வர்த்தக செலவுகள் குறைந்து, 4% முதல் 8% வரை பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.
கூடுதல் வரிகள்
கனடாவின் இரும்பு, அலுமினிய இறக்குமதிக்கு அமெரிக்கா 25% வரி விதித்துள்ளது. மேலும் ஏப்ரல் 2-ஆம் திகதி கூடுதல் வரிகள் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை சமாளிக்க பல உடனடி திட்டங்களைச் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
