மகிந்த மற்றும் கோட்டாபயவுக்கு எதிரான தடை - புலம்பெயர் தமிழர்களை மகிழ்விக்கும் கனடாவின் முயற்சி
புலம்பெயர் தமிழர்களை மகிழ்விக்கும் முயற்சியாகவே கனேடிய அரசு முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச உட்பட நான்கு பேருக்கு எதிராக தடைகளை விதித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்றி குற்றம் சுமத்தியுள்ளார். இது குறித்து அமைச்சர் நேற்று இலங்கைக்கான கனேடிய பதில் தூதுவருக்கு அறிவித்துள்ளார்.
கனேடிய அரசின் செயல் இருத்தரப்பு நல்லுறவுகளை பாதிக்கும்
இவ்வாறான முக்கியமான சந்தர்ப்பத்தில் கனேடிய அரசாங்கம் இவ்வாறு செயற்படுவது இருத்தரப்பு நல்லுறவுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவும் அமைச்சர், கனேடிய பதில் தூதுவரிடம் கூறியுள்ளார்.
இலங்கைக்கான கனேடிய பதில் தூதுவரை வெளிவிவகார அமைச்சு அழைத்து அமைச்சர் அலி சப்றி இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதை ஏற்றுக்கொண்டுள்ள கனடா
1983 ஆம் ஆண்டு மற்றும் 2009 ஆம் ஆண்டு வரையான காலத்தில் இலங்கையின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன என்பதை ஏற்றுக்கொண்டு கனேடிய அரசு இந்த தடைகளை விதித்துள்ளதுடன் முன்னாள் ஜனாதிபதிகளை தவிர கடற்படையின் முன்னாள் லெப்டினட் கமாண்டார் சந்தன பிரசாத் ஹெட்டியராச்சி மற்றும் முன்னாள் படைகளின் தலைமை சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க ஆகியோருக்கு எதிராக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் இவர்களுக்கு சொந்தமான சொத்துக்கள் கனடாவில் இருக்குமாயின் அவற்றை முடக்கவும் அவர்கள் கனடாவுக்குள் வரவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது எனவும் கனேடிய வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி தெரிவித்துள்ளார்.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
