உதவி கோரிய அமெரிக்கா: உடனே களத்தில் இறங்கிய கனடா
கலிபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்க அமெரிக்கா, கனடாவிடம் உதவி கோரியதற்கமைய, 60 கனேடிய தீயணைப்பு வீரர்கள் அமெரிக்காவிற்கு செல்லவுள்ளனர்.
'அமெரிக்க நண்பர்கள் காட்டுத்தீயை அணைக்க உதவி கோரியுள்ளனர்' என மேற்கோள்காட்டியுள்ள கனடாவின் அவசரகால தயார்நிலை அமைச்சர் ஹர்ஜித் சாஜன்(Harjit Sajjan) இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
அல்பர்டா மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணங்களிலிருந்து 60 தீயணைப்பு வீரர்கள் அனுப்பப்படவுள்ள நிலையில், தேவைப்படும் மேலதிக உதவிகள் கட்டம் கட்டமாக வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
வரலாறு காணாத காட்டுத்தீ
கலிபோர்னியா மாநிலத்தின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத காட்டுத்தீயால் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், இதன் காரணமாக 300,000 பேர் வரை அப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்துள்ளதாகவும் 10,000இற்கும் அதிகமான வீடுகள் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |