கனடாவின் தேசிய பாதுகாப்புக்கு சவாலான சீன கண்காணிப்பு கருவி! முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக சீன கண்காணிப்பு கண்காணிப்பு கருவி உற்பத்தியாளரான ஹிக்விஷனை மூட கனேடிய அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் கனேடிய தொழில்துறை அமைச்சர் மெலனி ஜோலியை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.
"கனடாவில் ஹிக்விஷன் கனடா இன்க். நிறுவனத்தின் தொடர்ச்சியான செயல்பாடுகள் கனடாவின் தேசிய பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் என்று அரசாங்கம் தீர்மானித்துள்ளது"என்று மெலனி ஜோலியின் எக்ஸ் தள பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹிக்விஷன் உபகரணங்கள்
சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் ஹிக்விஷன் உபகரணங்களைப் பயன்படுத்துவது குறித்து அமெரிக்காவும் கவலைகளை எழுப்பியுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
உய்குர் மக்களுக்கு எதிரான அத்துமீறல்கள்(உய்குரிஸ்தான் அல்லது கிழக்கு துருக்கிஸ்தான்) குறித்த அறிக்கைகளுக்கு இதுவே அடிப்படையாகும் என கனடா குற்றம் சுமத்தியுள்ளது.
எனினும், ஹிக்விஷன் செய்தித் தொடர்பாளர் ஒருவர், இந்த முடிவை நிறுவனம்ஏற்கவில்லை என்றும், அதில் உண்மை அடிப்படை, நடைமுறை நியாயத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் வாதிட்டுள்ளார்.
இருதரப்பு வர்த்தகம்
மேலும், கண்காணிப்பு உபகரண நிறுவனமான ஹிக்விஷனின் உள்ளூர் செயல்பாடுகளை மூடுமாறு கனடா கோருவது இருதரப்பு வர்த்தகத்தை சேதப்படுத்தும் என சீன வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன்படி இது நாடுகளுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கான சமீபத்திய முயற்சிகளை சிக்கலாக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 19 ஆம் நாள் திருவிழா




