வாகனத்திருட்டுக்களை குறைப்பதற்கு கனேடிய தமிழ் புலம்பெயர் அமைச்சர் எடுத்த நடவடிக்கை
திறப்பு இல்லாத உள்நுழைவுத் தொழில்நுட்பத்தின் சட்டவிரோத பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதன் மூலம், குற்றச் செயல்களை நாங்கள் தடுத்து, திருட்டுகள் நடப்பதற்கு முன்பே அவற்றைத் தடுக்க பொலிஸாருக்கு தேவையான கருவிகளை வழங்குகின்றோம்" என்று கனேடிய அமைச்சர் விஜய் தணிகாசலம்(Vijay Thanigasalam) தெரிவித்துள்ளார்.
திறப்பு இல்லாத உள்நுழைவுத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் குற்றவாளிகளை இலக்காகக் கொண்டு அதிகரித்து வரும் வாகனத் திருட்டுகளுக்கு எதிரான போராட்டத்தை ஒன்ராறியோ ஒரு புதிய சட்டமன்றத் திட்டத்துடன் முன்னெடுத்துள்ளது.
வாகனத் திருட்டு
இதற்கிணங்க கீழ்வரும் சட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. வாகனத் திருட்டில் பயன்படுத்தப்படும் என்று சந்தேகிக்கப்படும் 'கீ ஃபோப்' நிரலாக்க சாதனங்கள் மற்றும் 'ஸ்கேனர்கள்' போன்ற பொருட்களைக் கைப்பற்ற காவல்துறைக்கு அதிகாரம் அளிக்கும்.
சட்ட நடைமுறையாக்கத்தை ஆதரிப்பதற்கும் அதிகளவில் திருட்டு நடைபெறும் இடங்களில் கவனம் செலுத்துவதற்கும் ஒரு புதிய பெரிய வாகனத் திருட்டு வழக்கு விசாரணை குழு நிரந்தரமாக்கப்படும்.
இம்முயற்சி ஒன்ராறியோ எங்கும் வாழும் மக்கள் தங்கள் சமூகங்கள் தீவிரமாகப் பாதுகாக்கப்படுவதை அறிந்து பாதுகாப்பாக உணர்வதை உறுதி செய்கின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

இந்தியாவின் மிகவும் படித்த அரசியல்வாதி.., ஐஏஎஸ் வேலையை விட்டுவிட்டு இளம் வயதிலேயே இறந்த நபர் யார்? News Lankasri

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
