கனடாவில் 10 டொலர்களுக்கு காணி விற்பனை
கனடாவில் பத்து டொலர்களுக்கு காணிகள் விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவின் - ஒன்றாரியோ மாகாணத்தின் கோச்ரென்ஸ் நகரில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கோச்ரென்ஸ் நகரின் மேயர் பீற்றர் பொலிடிஸ் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் நகரை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
காணித் துண்டு விற்பனை
வீடு நிர்மானம் செய்வதற்கான கால வரையறை உள்ளிட்ட சில நிபந்தனைகளின் அடிப்படையில் காணித் துண்டு விற்பனை செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டதன் பின்னர் சுமார் மூவாயிரம் தொலைபேசி அழைப்புக்கள் கிடைக்கப் பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நபர்கள் தங்களுக்கு விருப்பான காணித் துண்டை தெரிவு செய்து கொள்ள முடியும் எனவும் அந்த காணி 10 டொலர்களுக்கு விற்பனை செய்யப்படும் எனவும் மேயர் தெரிவித்துள்ளார்.
நகரை அபிவிருத்தி
நகரில் சுமார் 1500 காணித் துண்டுகள் 10 டொலர்களுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
மேலும், இந்தக் காணித்துண்டுகளை கொள்வனவு செய்வோரே பகுதியின் உட்கட்டுமான வசதிகளை அபிவிருத்தி செய்யும் பொறுப்பினையும் ஏற்க வேண்டுமென மேயர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அமெரிக்காவில் திருட்டு சம்பவத்தில் கையும் களவுமாக சிக்கிய இந்திய பெண்: வெளியான வீடியோ காட்சி! News Lankasri

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri
