கனடாவில் இலங்கையருக்கு கிடைத்த பெரும் அதிஷ்டம்
கனடாவில் இலங்கையை சேர்ந்த ஒருவர் சுமார் 35 மில்லியன் கனேடிய டொலர்களை அதிஷ்டமாக பெற்றுள்ளார்.
லொட்டோ மெக்ஸ் லொத்தர் சீட்டிலுப்பில் 35 மில்லியன் கனேடிய டொலர்களை அவர் பரிசாக வென்றெடுத்துள்ளார்.
ஒன்றாரியோவின் வின்ட்ஸோர் பகுதியைச் சேர்ந்த ஜயசிங்க என்ற இலங்கையரே இந்த அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது.
மில்லியன் டொலர் பரிசுத் தொகை
கனடாவிற்கு குடிபெயர்ந்ததன் பின்னர் ஜயசிங்க அடிக்கடி லொத்தர் சீட்டு கொள்வனவு செய்வார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
ஜாக்பொட் பரிசுத் தொகை அதிகமாக காணப்படும் சந்தர்ப்பங்களில் மட்டும் அவர் லொத்தர் சீட்டு கொள்வனவு செய்வார்.
லொட்டோ மெக்ஸ் லொத்தர் சீட்டிலுப்பில் வென்ற 70 மில்லியன் டொலர் பரிசுத் தொகை விக்டோரியா மற்றும் ரொறன்ரோவைச் சேர்ந்தவர்கள் இடையே தலா 35 மில்லியன் டொலராக பகிரப்பட்டுள்ளது.
அதிஷ்டத்தில் பெற்ற பணத்தை ஒரு தொகை பணத்தை மகளின் கல்விக்காக செலவிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மிகுதியில் கார் ஒன்றை கொள்வனவு செய்யவும், அறக்கட்டளைகளுக்கு வழங்கவும், நாட்டில் உள்ள உறவினர்களை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளதாக ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |