கொழும்பில் இடம்பெற்ற கனடா வியாபார மற்றும் முதலீட்டாளர்கள் மாநாடு
கனடா சர்வதேச வர்த்தக கண்காட்சி, வியாபார மற்றும் முதலீட்டாளர்கள் மாநாடு 2024 இற்கான ஆரம்ப நிகழ்வும் வர்த்தக மற்றும் பாரிய, சிறுகைத்தொழில் முயற்சியாளர்களுடனான கலந்துரையாடலும் கொழும்பில் நடைபெற்றது.
இலங்கையில் உள்ள பொதுநலவாய சம்மேளனம் மற்றும் சர்வதேச வர்த்த இணைப்பாளர் கூட்டிணைப்பு ஆகியன ஒன்றிணைந்து மேற்படி நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தன.
பொதுநலவாய சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி அம்ரி நிசாம் மற்றும் வணிக உலக சர்வதேச அமைப்பின் இயக்குனர் ரகு இந்திர குமார், சர்வதேச வர்த்த இணைப்பாளர் கூட்டிணைப்பின் பணிப்பாளர் தன்வீர் ஆர். எம் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிங்கப்பூர் வர்த்தக போரத்தின் ஆளுநர் கலாநிதி சிந்தியா சாங் விசேட அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.
சர்வதேச சந்தை திட்டம்
மேற்படி நிகழ்வில் வெளிநாட்டு பிரதிநிதிகள் மற்றும் வர்த்தக பிரமுகர்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இங்கு கருத்து தெரிவித்த சர்வதேச வர்த்த இணைப்பாளர் கூட்டிணைப்பின் பணிப்பாளர் தன்வீர் ஆர். எம்,
“இலங்கையின் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கைத்தரம் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் எமது அமைப்பு பல்வேறு வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளது.
குறிப்பாக பாரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழிலாளர்களின் உற்பத்தி மற்றும் சேவைகளை சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்த சிறந்த ஏற்படுத்திக் கொடுக்க உள்ளோம்.
இதனூடாக இலங்கைக்கு அந்நிய செலாவணியைப் பெற்றுக் கொள்ள முடியுமென்பதுடன் சர்வதேச வர்த்தகத்தை மேம்படுத்தவும் முடியும்.
திறந்த பொருளாதார கொள்கையின் ஊடாகவே நாட்டின் பொருளாதார துரித வளர்ச்சியடையும் என்பதுடன் இலங்கையிலுள்ள முன்னணி வர்த்தகர்கள் போட்டி கொடுக்க சந்தைக்கு முகம் கூடியதாகவும் இருக்கும்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri
