படுகொலை விசாரணையில் இந்தியா ஒத்துழைக்க வேண்டும்: குரல் கொடுக்கும் அமெரிக்க தரப்பு
கனடாவில் சீக்கிய பிரிவினைவாதி படுகொலை விசாரணையில் இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஆண்டனி பிளிங்கன் மீண்டும் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் உடன் வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தையின் போது சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலை தொடர்பிலும் கருத்து பரிமாற்றம் நடந்ததாக கூறப்படுகிறது.
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவிக்கையில், சீக்கிய தலைவர் படுகொலையில் இந்தியாவின் பங்கு தொடர்பில் அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் Blinken இந்தியாவின் ஜெய்சங்கருக்கு எடுத்துரைப்பார் என நம்புவதாக குறிப்பிட்டிருந்தார்.
ஆண்டனி பிளிங்கன் குரல்
கனேடிய மண்ணில் அந்த நாட்டவர் கொல்லப்பட்டதில், இந்தியாவுக்கு பங்கிருப்பதாக கூறப்படுவது அபத்தம் என புறந்தள்ளப்பட்ட நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு விரிசல் கண்டது.
பங்காளிக்காக குரல் கொடுத்தமை மட்டுமின்றி, இரு நாடுகளும் தங்கள் தூதரக அதிகாரிகளை வெளியேற்றி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இந்த நிலையிலேயே ஆண்டனி பிளிங்கன் தங்களது பங்காளிக்காக குரல் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிகாரிகள் தரப்பில் இருந்து இந்த தகவல் கசிந்தாலும், வெளிவிவகார அமைச்சரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
கனடா - இந்தியா முறுகல்
அது மட்டுமின்றி, பரம்பரை பங்காளிகளான அமெரிக்கா உட்பட்ட நாடுகள், கனடா - இந்தியா முறுகலை கொஞ்சம் எச்சரிக்கையுடனே அணுகி வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியா போன்ற ஒரு சந்தையை பகைத்துக்கொள்வதை பல நாடுகளும் விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது.
you may like this