கனடாவுக்கு இலங்கை அரசாங்கம் அளித்த விளக்கம்
இலங்கையின் நல்லிணக்கம் தொடர்பில் கனடாவுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கையின் கனடாவுக்கான உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள ஹர்ஸகுமார நவரட்ன, தமது பதவி ஆவணங்களை கையளிக்கும் நிகழ்வின்போது கனடாவின் ஆளுநர் நாயகத்திடம் (Mary May Simon) இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.
இலங்கையின் நல்லிணக்க விடயங்களில் புதிய முயற்சிகள், கனடாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை மேம்படுத்தல் மற்றும் இலங்கையின் கனடாவின் முதலீடுகள் போன்றவை தொடர்பில் புதிய உயர்ஸ்தானிகர் ஹர்ஸகுமார நவரட்ன கருத்துக்களை வெளியிட்டார்.
இதன்பின்னர் தமது கருத்தை வெளியிட்ட கனேடிய ஆளுநர் நாயகம், இலங்கையின் புலம்பெயர்ந்தோர், கனடாவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருவதாக தெரிவித்தார்

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 4 நாட்கள் முன்

சீக்கிரமே திருமணம் செய்ய ஆசைப்படும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
